பதிவு செய்த நாள்
19
மார்
2014
11:03
கடம்பத்துார்: கடம்பத்துார் அடுத்த, தேவிகுப்பத்தில் உள்ள வரசித்தி செல்வ விநாயகர் கோவிலில், இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த கோவிலில் அமைந்துள்ள, வரசித்தி செல்வ விநாயகர், சுப்ரமணியம் மற்றும் நவக்கிரக மூர்த்திகளுக்கு, இன்று காலை, 9:00 மணி முதல், 10:30 மணிக்குள், மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது முன்னதாக, நேற்று மாலை, 5:30 மணிக்கு, முதல்கால யாக சாலை பூஜை நடந்தது. இன்று காலை, 7:00 மணி முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும், அதை தொடர்ந்து மகா கும்பாபிஷேகமும் நடைபெறும். தொடர்ந்து மாலை சுவாமி வீதி உலாவும், பின், 48 நாட்களுக்கு மண்டல பூஜைகளும் நடைபெறும்.