தேவகோட்டை : "" தேவகோட்டை பகுதியில், தேர்தலை காரணம் காட்டி திருவிழாவிற்கு தடை விதிப்பதாக, புகார் எழுந்துள்ளது. பொதுவாக, கிராமப்புறங்களில், பங்குனி மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறும். தற்போது தேர்தலை காரணம் காட்டி விழாவிற்கு தடை செய்து நடத்த முடியாத அளவிற்கு போலீசார் கெடுபிடி விதிக்கின்றனர். குறிப்பாக, சில கோவில்களில் 10 மணிக்குள், விழாக்களை நடத்தி முடித்துக்கொள்ளுமாறு கூறுகின்றனர். அதற்கு மேல், ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது என தெரிவித்துவிட்டனர். தற்போது, தென்னீர்வயல் காளியம்மன் கோயில், வளங்காவயல் அம்மன் கோயில்களில் திருவிழாவிற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்து, தேர்தலுக்கு பின் விழா நடத்தக்கூறுகின்றனர். இது கிராமத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.