சாத்தூர்: சாத்தூரில் பழமையான ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீகாளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து, நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. சாத்தூர் பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கரகம் எடுத்தல் மற்றும் பொங்கல்விழா, பூக்குழி இறங்கும் விழா, மார்ச் 30 தேதி இரவு நடைபெற உள்ளது. விழா கொடியேற்றத்தை தொடர்ந்து, நாள் தோறும் மாரியம்மன், ரிஷபம், புஷ்பபல்லாக்கு, சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில், முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக் குழுவினர் செய்கின்றனர்.