பதிவு செய்த நாள்
02
ஏப்
2014
11:04
ப.வேலூர்: மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள், தேர் வடம் பிடித்து இழுத்தனர். ப.வேலூர், மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 16ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும், காலை அபிஷேகமும், இரவு, 7 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலாவும் நடக்கிறது. நேற்று காலை, 9 மணிக்கு, திருத்தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.