உங்களின் மென்மையான போக்கால்அனைவரையும் கவருவீர்கள். பசுமை நிறைந்தஉங்கள் வாழ்வில், கடந்த சில ஆண்டுகளாக எண்ணற்ற கஷ்டத்தை அனுபவித்து வந்தீர்கள். அதற்கு காரணம் முக்கிய கிரகங்கள் எதுவும் சாதகம் இல்லாமல் இருப்பதே. இந்த ஆண்டு பிற்பகுதியில் நன்மை வரத் தொடங்கும்.ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கிறார். அவரால் பொருள் நஷ்டம், மன சஞ்சலம் ஏற்படலாம். ஜூன்13ல் குருபகவான் மிதுனத்தில் இருந்து லாபஸ்தானமான கடகத்திற்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். இதனால், பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறக்கும். புதிய பதவி கிடைக்க யோகமுண்டு.நிழல் கிரகமான ராகு தற்போது சனிபகவானோடு 2-ம் இடத்தில் இணைந்திருக்கிறார். இதனால் அவரால் நன்மை தர முடியாது. ஆனால் குருபகவானின் பார்வை அவர்கள் மீது விழுவதால் கெடுபலன்உண்டாகாது. ஜூன்21ல் ராகு உங்கள் ராசிக்குவருகிறார். அதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. இதனால், உடல் உபாதையும், உறவினர் வகையில் மனக்கசப்பும் ஏற்படலாம்.கேது தற்போது 8-ம் இடமான மேஷத்தில்இருக்கிறார். இதுவும் நல்லதல்ல. உஷ்ணம், பித்தம், மயக்கம், சளி போன்ற தொந்தரவு அடிக்கடி வரலாம். ஜூன் 21ல் கேது 7-ம் இடத்திற்கு வருகிறார். அங்கும் அவரால் நன்மை கிடைக்காது. அலைச்சல் அதிகரிக்கும். மனவேதனை உண்டாகும். மனைவி வகையில் பிரச்னை வரலாம். அதேநேரம் குருவின் பார்வை கேது மீது விழுவதால் கெடுபலன் குறையும்.சனிபகவான் 2-ம் இடமான துலாமில் உள்ளார். அவர் குடும்பத்தில் பிரச்னை ஏற்படுத்துவார். பொருள் களவுபோக நேரிடும். பொருளாதார இழப்பு உண்டாகும். தற்போது சனிபகவான் வக்கிரத்தில் சிக்கி இருப்பதால் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. வக்கிரநிலையிலும், அதே துலாம் ராசியிலேயே இருப்பதால் கெடுபலன் நடக்காது. டிச. 16ல் சனிபகவான் துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு இடப்பெயர்ச்சியாகிறார். இது சிறப்பான வகையில் நன்மை வாழ்வில் ஏற்படும். முயற்சி அனைத்தையும் வெற்றி அடைய செய்வார். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் சிறந்தோங்கச் செய்வார்.
தொழில், வியாபாரம்: தொழிலில் அலைச்சலுக்கு குறைவிருக்காது. புதிய வியாபாரத்தை ஆரம்பிக்கலாம். தொடக்கத்தில் பொருள் விரயம்ஏற்பட வாய்ப்புண்டாகும். அரசிடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்காது. ஜூன் மாதம் முதல் வருமானம் அதிகரிக்கும். பகைவர் கூட உங்களை உணர்ந்து சரண் அடைவர். கொடுக்கல் வாங்கல் சிறப்பாகஇருக்கும். திறமை மேம்படும். அரசின் உதவிகிடைக்கும். வேலை இன்றி இருப்பர்கள் சுய தொழிலை ஆரம்பிக்க வாய்ப்புண்டு. ஆண்டின் இறுதியில் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும்.
பணியாளர்கள்: பணிச்சுமை அதிகரிக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு விரும்பாதஇடமாற்றம் ஏற்படலாம். ஜூன் மாதத்திற்குப் பிறகு நன்மையான பலனை எதிர்பார்க்கலாம். வேலையில் இருந்து வந்த தடை, திருப்தியின்மை அடியோடு மறையும். வேலையில் புதிய தெளிவு பிறக்கும்.அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களும் உதவிகரமாக இருப்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். சிலர் அதிகாரஅந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலை இன்றி இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் புதியவேலை கிடைக்கும்.
கலைஞர்கள்: தொடக்கத்தில் சுமாரான பலனைகாணலாம். புதிய ஒப்பந்தம் பெற விடா முயற்சி தேவைப்படும். ஜூன் மாதம் முதல் கலைஞர்கள் எளிதில் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர். தொண்டர்களின் ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும். பொது மக்களிடையே நற்பெயர்கிடைக்கும்.
மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் அக்கறையுடன் படிக்க வேண்டும். முயற்சிக்கு தகுந்த பலன்கிடைக்காமல் போகாது. அடுத்த கல்வி ஆண்டுசிறப்பானதாக அமையும். விரும்பிய நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறுவீர்கள். படிப்பில் பளிச்சிடுவீர்கள். சிலர் வெளிநாடு சென்றுபடிக்கும் யோகத்தைப் பெறுவர்.
விவசாயிகள்: விவசாயத்தில் சிறப்பானமகசூலும், நல்ல வருமானமும்கிடைக்கும். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. வழக்கு விவகாரங்கள் சாதகமாக சூழல் அமையும். எதிர்பார்த்த நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள்: குடும்ப வாழ்வில் குதூகலம் காண்பர். குழந்தை பாக்கியம் பெறுவர். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். ஆண்டின் பிற்பகுதியில் முன்னேற்றமான பலன் கிடைக்கும். பிறந்த வீடு, உறவினர் வகையில் இருந்த பிரச்னை மறையும். உடல்நலம் சிறப்பாகஇருக்கும். உஷ்ணம், தோல்,தொடர்பான நோய் பூரண குணம் அடையும். பயணப்பீதி மறையும்.
மேலும்
தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »