Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம் : தமிழ்ப்புத்தாண்டு பலன் 2026 – ... சிம்மம் :  தமிழ்ப்புத்தாண்டு பலன் 2026 – 2027 சிம்மம் : தமிழ்ப்புத்தாண்டு பலன் 2026 – ...
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2026 முதல் 13.4.2027 வரை)
கடகம் : தமிழ்ப்புத்தாண்டு பலன் 2026 – 2027
எழுத்தின் அளவு:
கடகம் :  தமிழ்ப்புத்தாண்டு பலன் 2026 – 2027

பதிவு செய்த நாள்

13 ஏப்
2026
01:04

கடகம்: புனர்பூசம்: உழைப்பால் உயர்வு


பொன் பொருள் புகழுக்கு காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2,3 ம் பாதங்களான மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 4 ம் பாதமான கடக ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ ஆண்டில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, உழைப்பிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். முதலீட்டிற்கேற்ற வருமானம் வரும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். உத்தியோகம், தொழிலில் கவனம் கூடும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இதுவரை இருந்த போராட்டங்கள் பிரச்சனைகள் எல்லாம் முடிவிற்கு வரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். பொன் பொருள் சேரும். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கும் சொல்வாக்கும் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.


சனி சஞ்சாரம்: புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜீவன சனியாக சஞ்சரிப்பவர், வியாபாரம் தொழிலில் அக்கறையை அதிகரிப்பார். தவறுக்கு இடம்கொடுக்காமல் செயல்படுபவர்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். உழைத்தால்தான் உயர்வு என்ற நிலையை ஏற்படுத்துவார். அதனால் வேலைப்பளு கூடும். உத்தியோகத்தில் தவறு செய்பவர்களுக்கு மெமோ, இடைநீக்கம், பதவி உயர்வில் தடை என்ற நிலைகள் உருவாகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பாக்ய சனியாக சஞ்சரிப்பவர், சமூகத்தில் செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவார். நெருக்கடிகளையும் போராட்டங்களையும் சந்தித்து வந்தவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். பட்டம், பதவி, அந்தஸ்து, புகழ், வீடு, மனை, வாசல், வாகனம் என்ற கனவுகளை நனவாக்குவார்.


ராகு – கேது சஞ்சாரம்: 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13 வரையில் பாக்ய ராகுவும், சகாய கேதுவும் செல்வம் செல்வாக்கோடு நடைபோட வைப்பார்கள். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார்கள். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார்கள். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றமான நிலையை உருவாக்குவார்கள். நவ.13 முதல் கேது தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திலும், ராகு அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிதானமும் கவனமும் தேவைப்படும். 4 ம் பாதத்தினருக்கு, நவ. 13 வரை ராகு அஷ்டம ஸ்தானத்திலும், கேது தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும் அதன்பிறகு, ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு நிறையவே படிப்பினைகளையும் பாடங்களையும் வழங்குவார்கள் என்பதால் அனைத்திலும் நிதானமாகவும், திட்டமிட்டும் செயல்படுவது நன்மையாகும்.


குரு சஞ்சாரம்: 2026 மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கிறார், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர் 2027 பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 வரை அலைச்சல் அதிகரிக்கும், சிலருக்கு இடமாற்றம் ஏற்படும், திருமணம், குழந்தை பாக்யம், சொந்த வீடு என்ற கனவுகள் நனவாகும். மே 26 முதல் குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும், வழக்கு விவகாரம் சாதகமாகும், தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும், ஜீவன சனியால் ஏற்படும் சங்கடங்கள் விலகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இடம், வீடு, வாகனம் என்ற ஆசைகள் நிறைவேறும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்று அவரவர் நிலைக்கேற்ப பலன்கள் உண்டாகும். வாழ்வில் நிம்மதி இருக்கும்.


சூரிய சஞ்சாரம்: 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஆவணி, கார்த்திகை, பங்குனி, சித்திரை மாதங்களிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு புரட்டாசி, மார்கழி, சித்திரை, வைகாசி மாதங்களிலும் ஆத்ம காரகனான சூரியன் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிப்பதால்,  வாழ்க்கை வளமாகும், எடுத்த வேலைகள் வெற்றியாகும், நினைத்த காரியங்கள் நடந்தேறும், வேலை, தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும், அரசுவழி முயற்சிகள் சாதகமாகும், வம்பு வழக்குகள் முடிவிற்குவரும், வரவேண்டிய பணம் வரும்.


பொதுப்பலன்: பராபவ ஆண்டு உங்கள் வாழ்க்கையில் யோகமான ஆண்டாக இருக்கும், தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும், இடம் வீடு வாகனம் என்று சேரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு ஏற்படும்.


தொழில்: அலட்சியத்திற்கு இடம் கொடுக்காமல் தொழிலில் கண்ணும் கருத்தமாக இருக்க வேண்டிய காலமிது. புதிய முதலீடு செய்வதற்கு முன் மார்க்கெட் நிலவரம் அறிந்து செயல்படுவது நன்மையாகும். சர்வதேச விவகாரங்கள் உங்கள் தொழிலிலும் எதிரொலிக்கும் என்பதால் உற்பத்தி, விற்பனை இரண்டிலும் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., ஏ.ஐ., அலைபேசி, ஏற்றுமதி, இறக்குமதி, பங்கு வர்த்தகம், நிதிநிறுவனம், தொழிற்சாலை, ட்ராவல்ஸ், குடிநீர், விவசாயம் சார்ந்த தொழில்கள், ரியல் எஸ்டேட், ஜீவல்லரி, அழகு சாதன பொருட்கள் விற்பனை லாபம் தரும்.


பணியாளர்கள்: வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வேலையின்மீது பயம் இருக்கும். சிலர் சொந்த ஊருக்குத் திரும்பும் நிலையும் உருவாகும். உள்நாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலைபளு கூடும் என்றாலும் திறமைக்கேற்ற உயர்வும் சலுகையும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் இக்காலத்தில் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவது அவசியம். வேலையில் சரியாக இருப்பவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வும் சலுகைகளும் கிடைக்கும்.


பெண்கள்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தினர் ஆதரவால் நீண்டநாள்  கனவுகள் நனவாகும் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்று அவரவர் வயதிற்கேற்ப தேவைகள் பூர்த்தியாகும், வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். கணவருடன் இணக்கமான நிலை இருக்கும். பிள்ளைகள்மீது அக்கறை கூடும், பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும்.


கல்வி: மேல்நிலையில் இருந்து உயர் கல்விக்கு செல்வீர்கள். எதிர்பார்த்த கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.


உடல்நிலை: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக மருத்துவ மனைகளுக்கு அடிக்கடி சென்று வந்தவர்களுக்கு நோய்களில் இருந்து விடுதலைக் கிடைக்கும். ஆரோக்யம் சீராகும். விபத்து, பரம்பரைநோய், தொற்றுநோய், பருவநோய் என்று சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு ஏற்பட்ட பயம் போகும்.


குடும்பம்: குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பண நெருக்கடி நீங்கும், இடம், வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். பிள்ளைகளின் கல்வி, திருமணம் என்ற எண்ணம் பூர்த்தியாகும். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள்.


பரிகாரம்: ஜெகந்நாதரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். சங்கடங்கள் விலகும். 


பூசம்: நல்லநேரம் வந்தாச்சு


மனக்காரகனான சந்திரன், கர்மக்காரகனான சனி அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ ஆண்டு மிக யோகமான ஆண்டாகும். இதுவரை பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் நடக்காத வேலைகள் இப்போது நடக்கும். வாழ்க்கை முழுவதும் போராடிக்கொண்டே இருக்க வேண்டியதுதானா? நமக்கு விடிவு காலமே இல்லையா? என்று சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு இந்த ஆண்டில் எடுத்த வேலையெல்லாம் வெற்றியாகும், நினைத்த காரியமெல்லாம் நடந்தேறும். வாழ்வில் எதுவெல்லாம் கனவாக இருந்ததோ அவையெல்லாம் நனவாக ஆரம்பிக்கும்.


சனி சஞ்சாரம்: சனி பகவான் 12 ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில், பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில்தான் ஜாதகருக்கு மிகப்பெரிய யோகத்தை வழங்குவார். காரணம், அவருடைய மூன்று பார்வைகளும் 3,6,11 ம் இடங்களுக்கு கிடைத்து அந்த இடங்களின் வழியாகவும் அவர் நற்பலன்களை வழங்குவதால்தான், பாக்ய சனியால் இந்த ஆண்டில் உங்கள் வாழ்க்கை வளமாகும். தைரியம் கூடும். புதிய சொத்து சேரும். வருமானம் அதிகரிக்கும். பட்டம் பதவி கவுரவம் அந்தஸ்து, சொத்து சுகம் ஆரோக்யம் என்று வாழ்க்கை வளமாகும். சிலர் புதிய தொழில் தொடங்கி லாபம் காண்பீர்கள். அரசியல்வாதிகள் உயர்ந்த இடத்தை எட்டுவீர்கள். 


ராகு – கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு அஷ்டம ஸ்தானத்திலும், கேது தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உங்கள் வேலைகளில் நிதானம் வேண்டும், குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதுடன் பண விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். நவ. 13 முதல் ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் புதியவர்களால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும், ஒரு பக்கம் ஆசை அதிகரித்து அதன் பாதையில் செல்லக்கூடிய நிலையும் மறுபக்கம் அதனால் சங்கடங்கள், பிரச்னைகள் என்ற நிலையும் உண்டாகும். எனவே அனைத்திலும் நிதானமாக யோசித்து செயல்படுவது நன்மையாகும்.


குரு சஞ்சாரம்: 2026 மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கிறார், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர் 2027 பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் மே 26 வரை செலவு அதிகரிக்கும், இடம், வீடு, வாகனம் என்று வாங்குவதால் கையிருப்பு கரையும், நோய்நொடி விலகும், அஷ்டம ராகுவின் பாதிப்புகள் விலகும். மே 26 முதல் உச்ச குருவால் உங்கள் வாழ்க்கை வளமாகும். இளைஞர்களுக்கு உயர்கல்வி கனவு நனவாகும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். திருமணம் நடந்தேறும், குழந்தை பாக்யம் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதிய சொத்து சேரும். சேமிப்பு உயரும். 


சூரிய சஞ்சாரம்: தன்னுடை சஞ்சாரத்தில் மற்ற கிரகங்களை அஸ்தமனம் அடையச்செய்யும் ராஜ கிரகமான சூரியன், 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் செல்வம் செல்வாக்கு அந்தஸ்தோடு நடைபோட வைப்பார். அந்த நிலையில், புரட்டாசி, மார்கழி, சித்திரை, வைகாசி மாதங்களில் சூரியன் உங்களுக்கு நன்மைகளை உண்டாக்குவார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். தைரியமாக செயல்பட வைப்பார். நோய்நொடிகள், எதிர்ப்பு, வம்பு வழக்குகளில் இருந்து விடுவிப்பார். வேலை, தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். செல்வாக்கு அந்தஸ்தை உயர்த்துவார், அரசுவழி முயற்சிகளை சாதகமாக்குவார்.


பொதுப்பலன்: பாக்ய சனி, ஞானக்காரகன் குரு, 120 நாட்கள் சூரியனால் பராபவ ஆண்டு உங்கள் வாழ்க்கையை பசுமையாக்கும் ஆண்டாக இருக்கும். இதுவரை வெறும் கனவாகவே இருந்தவை எல்லாம் இப்போது நனவாகும். பொன் பொருள் வீடு, வாகனம், அந்தஸ்து உங்களை வந்து சேரும். வேலை, தொழில், வருமானம் என்ற கனவுகள் நனவாகும்.


தொழில்: தொழிலுக்கு காரகனான சனி பகவான் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன், சகாய, சத்ரு ஜெய, லாப ஸ்தானங்களைப் பார்ப்பதால் செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும், புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்ப்பு போட்டி என்ற நிழல் விலகும். வருமானம் உயரும். வருமானக்குறைவாலும், ஆட்கள் பற்றாக்குறையாலும் மூடி வைக்கப்பட்ட தொழில்களும் மீண்டும் புத்துயிர்பெறும். இயந்திரத் தொழிற்சாலை, வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு, வாகன விற்பனை, ஐ.டி., ஏ.ஐ., வெளிநாட்டு வர்த்தகம், ட்ராவல்ஸ்,  குடிநீர் சம்பந்தப்பட்ட தொழில்கள், விவசாயம் சார்ந்த தொழில்கள்,  கால்நடை வளர்ப்பு, பால் வியாபாரம், ஜூவல்லரி தொழில்கள், சட்டம் சார்ந்த தொழில் வளர்ச்சி அடையும். 


பணியாளர்கள்: வேலையின் மீதிருந்த பயம் போகும். நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு  வேலையில் இருந்த குழப்பம் போகும். நிம்மதி உண்டாகும்.


பெண்கள்: போராட்டமும் பிரச்னையாகவுமே இருந்த வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உடல்நிலை சீராகும். சிலருக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்யம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்டு வந்த பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு பொறுப்புகள் தேடிவரும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும். கணவரின் ஆதரவால் உங்கள் தைரியம் கூடும். பொன் பொருள் சேரும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.


கல்வி: படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்விக்காக சிலர் வெளிநாடு, வெளிமாநிலம் என்றும் செல்வீர்கள். பொறியியல், சட்டம், மருத்துவக் கனவு நனவாகும்.


உடல்நிலை: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். படுக்கையில் இருந்தவர்களும் எழுந்து நடமாடக்கூடிய அளவிற்கு நிலைமாறும். மருத்துவச்செலவுகள் குறையும். ருண ரோக ஸ்தானத்தை ஆயுள்காரகன் பார்ப்பதால் ஆரோக்கியம் சீராகும். சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய அளவிற்கு உடல்நிலை முன்னேற்றமடையும்.


குடும்பம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் இருந்த இடம் தெரியாமல் போகும். புதிய இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகளின் உயர்கல்வி முயற்சி வெற்றியாகும். வீட்டில் மங்கல ஓசை கேட்கும். 


பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும். வேண்டுதல் நிறைவேறும்.


ஆயில்யம்: நினைத்தது நடக்கும்


வித்யா காரகனான புதன், மனக்காரகனான சந்திரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ ஆண்டு அதிர்ஷ்டமான ஆண்டாகும். பணவரவில் தடை, உடல்நிலையில் பாதிப்பு, வியாபாரம், தொழிலில் நெருக்கடி, உத்தியோகத்தில் பிரச்னை, குடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலை என்று சுற்றிச்சுற்றி சங்கடங்களையே அனுபவித்து வந்த உங்களுக்கு இனி, எடுத்த வேலைகள் வெற்றியாகும், நினைத்த காரியங்கள் நடந்தேறும், அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும், மனதில் நிம்மதி உண்டாகும்.


சனி சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான 9 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கர்மக்காரகன் சனி பகவான் தனது 3,7,10 பார்வைகளால் லாப, சகாய, சத்ரு ஜெய ஸ்தானங்களைப் பார்ப்பதால் உங்கள் வாழ்வில் வசந்தம் வீசும். பொன்னும் பொருளும் புகழும் கூடும், தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், திட்டமிட்டு வெற்றிக்கோட்டை எட்டுவீர்கள், எதிர்ப்பு, வம்பு, வழக்கு, நோய், நொடி என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். புதிய இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். சனி கொடுக்க எவர் தடுப்பார் என்ற வார்த்தைக்குரிய அர்த்தத்தை இப்போது உணர்வீர்கள். அரசியல் வாதிகள் வாழ்க்கையில் இந்த ஆண்டு செல்வாக்கான ஆண்டாக இருக்கும்.


ராகு – கேது சஞ்சாரம்: நவ. 13 வரை எட்டாமிடத்தில் ராகு, இரண்டாமிடத்தில் கேது நவ. 13 முதல் ஜென்ம ராசிக்குள் கேது, ஏழாமிடத்தில் ராகு என்று சஞ்சரிப்பதால் இந்த ஆண்டில் சர்ப்ப கிரகங்களால் சங்கடங்களே ஏற்படும். எனவே ஆசைகளை கட்டுப்படுத்திக் கொள்வதும், நிதானமாக செயல்படுவதும் நன்மையாகும். புதியவர்களிடம் ஓரடி விலகியே இருக்கவும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனையை ஏற்று நடப்பதும், அனுசரித்துச் செல்வதும் நன்மையளிக்கும். புதிய முதலீடுகளில் கூடுதல் கவனம் தேவை.


குரு சஞ்சாரம்: 2026 மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கிறார், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர் 2027 பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கிறார். பொதுவாக, குரு பகவானின் சஞ்சாரங்களைவிட அவர் பார்க்கும் இடங்களும், பார்க்கும் பாப கிரகங்கங்களும் சுபத்துவம் பெறும். இதனால், செலவு ஏற்பட்டாலும் வீடு, வாசல், வாகனம் என்ற தேவைகள் பூர்த்தியாகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை என்ற கனவுகள் நனவாகும். பட்டம், பதவி என்ற ஆசைகள் பூர்த்தியாகும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் தொழில் லாபமடையும், பொருளாதார நிலை உயரும்.


சூரிய சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு தன குடும்ப வாக்காதிபதியான சூரியனின் சஞ்சார நிலைகள் இந்த ஆண்டில் 120 நாட்கள் வாழ்வை வளமாக்கும். 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் சூரியன் அந்த இடத்திற்குரிய பலன்களை யோகப்பலன்களாக வழங்குவார், மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள் எதிர்மறையாகவும் பாதகமாகவும் இருந்தாலும் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்கள் உங்களைப் பாதுகாக்கும். இக்காலங்களில் உங்கள் நிலை உயரும். உடல்நிலை சீராகும், அரசுவழி முயற்சிகள் சாதகமாகும், வழக்கு விவகாரங்களில் வெற்றி உண்டாகும், வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். புதிய தொழில் தொடங்குவதற்கு தேவையான அனுமதிகள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். அந்த நிலையில், புரட்டாசி, மார்கழி, சித்திரை, வைகாசி மாதங்களில் சூரியன் உங்களுக்கு நன்மைகளை உண்டாக்குவார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார்.


பொதுப்பலன்: பராபவ ஆண்டு நினைத்ததை சாதித்துக்கொள்ளும் ஆண்டாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வாழ்க்கையின் அடிப்படைகள் பூர்த்தியாகும். செல்வம் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் பிரச்னைகள் முடிவிற்குவரும். எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். பொன் பொருள் பணம் வீடு வாசல் என்று நிலை உண்டாகும்.


தொழில்: செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். சூழ்நிலையின் காரணமாக மூடிய தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும், எதிர்பார்த்த லாபம் வரும். பால்பண்ணை, நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், காலண்டர், டைரி, நோட்டுப்புத்தகம் தயாரிப்பு, செய்தித்தாள், ஐ.டி, ஏ.ஐ துறைகள், வெளிநாட்டு வர்த்தகம், குடிநீர் சம்பந்தப்பட்ட தொழில்கள், மினரல் வாட்டர், ஹார்ட்வேர், ஷேர் மார்க்கெட், சின்னத்திரை, வலைதளம், தனியார் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடையும். லாபம் தரும்.


பணியாளர்கள்: உழைப்பாளர்கள் திறமை வெளிப்படும் ஆண்டாக பராபவ ஆண்டு இருக்கும். வேலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கிடைப்பதுடன் எதிர்பார்த்த சம்பளமும் சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு தடைபட்டுவந்த பதவி உயர்வு, கேட்டும் கிடைக்காத இடமாற்றம் இந்த ஆண்டில் கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.


பெண்கள்: திட்டமிட்ட வேலைகள் நடக்கவில்லை, எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை என்று சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். இதுவரை இருந்த பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். கருத்து வேறுபாடு மற்றும் வேலையின் காரணமாக கணவரைவிட்டு விலகி இருந்தவர்கள் மீண்டும் ஒன்றாக வாழக்கூடிய நிலை உருவாகும். வெளிவட்டாரத்திலும் உறவினர்கள் மத்தியிலும் செல்வாக்கு உயரும். மரியாதை அதிகரிக்கும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். வேலைக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.


கல்வி: மாணவர்கள் எதிர்காலம் பற்றி திட்டமிடுவீர்கள். படிப்பில் அக்கறை உண்டாகும். உயர்கல்வி கனவு நனவாகும்.


உடல்நிலை: அஷ்டம சனியால் உடல் நிலையில் பாதிப்பினை சந்தித்து, மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கி வந்தவர்கள் நிலையில் மாற்றம் ஏற்படும், விபத்து, நரம்புக்கோளாறு, தொற்றுநோய் என்று சங்கடப்பட்டு வந்தவர்கள் மருத்துவத்தால் குணமடைந்து ஆரோக்கியமாக நடைபோடுவீர்கள்.


குடும்பம்: இதுவரை கனவாகவே இருந்ததெல்லாம் பராபவ ஆண்டில் நனவாகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய இடம் வீடு வாகனம் என்று வாங்க முடியும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.


பரிகாரம்: சுவேதாரண்யேசுவரரை வழிபட வாழ்வில் இருந்த சங்கடம் விலகும். வளம் உண்டாகும்.

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2026 முதல் 13.4.2027 வரை) »
temple news
மேஷம்: அசுவினி: யோக காலம்தைரிய காரகனான செவ்வாய், ஞானகாரகனாக கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை: நல்ல காலம் வந்தாச்சுஆத்மக்காரகன் சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம்: உழைப்பால் முன்னேறுவீர்கள்தைரிய, வீரிய, பராக்கிரமக்காரகனான செவ்வாயின் ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆத்மக்காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
கன்னி: உத்திரம்: செயல்களில் கவனம்ஆத்மக்காரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar