Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம் : தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன்  ரிஷபம் :  தமிழ்ப்புத்தாண்டு பலன் 2026 – 2027 ரிஷபம் : தமிழ்ப்புத்தாண்டு பலன் 2026 – ...
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2026 முதல் 13.4.2027 வரை)
மேஷம்: தமிழ்ப்புத்தாண்டு பலன் 2026 – 2027
எழுத்தின் அளவு:
மேஷம்:  தமிழ்ப்புத்தாண்டு பலன் 2026 – 2027

பதிவு செய்த நாள்

13 ஏப்
2026
12:04

மேஷம்: அசுவினி: யோக காலம்


தைரிய காரகனான செவ்வாய், ஞானகாரகனாக கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, உங்களுடைய அசுவினி நட்சத்திர சாரத்தில் மேஷ ராசியில் சூரியன் உச்சமடையும் நாளில் பராபவ வருடம் பிறக்கிறது. எதிலும் யோசித்து செயல்படும் உங்களுக்கு இந்த ஆண்டு யோகமான ஆண்டாக இருக்கும். உங்கள் திறமை வெளிப்படும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். நினைத்த வேலைகள் நினைத்தபடி நடந்தேறும்.


சனி சஞ்சாரம்: ஆண்டு முழுவதும் சனி பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், உங்கள் நட்சத்திரநாதனுக்கு நட்பான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணிப்பதால் எடுத்த வேலை நடந்தேறும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். நோய் நீங்கும். எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரங்கள் வெற்றியாகும். ஆடம்பர செலவு அதிகரிக்கும்.


ராகு – கேது சஞ்சாரம்: 2026 நவ. 13 வரை ராகு கும்பத்தில் சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். வியாபாரம், தொழில் லாபம் தரும். நவ. 13 முதல் கேது கடகத்திலும், ராகு மகரத்திலும் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். வேலைப்பளு கூடும். மறைமுகத் தொல்லைகளால் மனம் வேதனைப்படும்.


குரு சஞ்சாரம்: மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகளால் திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும். இடம், வீடு, வாகனம் வாங்க முடியும். மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கும் குருவால், விரய சனியின் பாதிப்புகள் விலகும். அக். 20 முதல் சிம்மத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கும் குருவால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் நிம்மதி, தொழிலில் வளர்ச்சி, உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். 2027 பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கும் குருவால், சனி பகவான் தரும் சங்கடங்கள் விலகும்.


சூரிய சஞ்சாரம்: ராஜ கிரகமான சூரிய பகவான் ஒவ்வொரு ராசியினருக்கும் 3, 6, 10, 11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் யோகப்பலன்களை வழங்குவார். அந்த நிலையில் ஆனி, புரட்டாசி, தை, மாசி ஆகிய நான்கு மாதங்களிலும் உங்கள் செல்வாக்கு, அந்தஸ்தை உயர்த்துவார். தைரியமாக நடைபோட வைப்பார். வழக்கு விவகாரங்களில் வெற்றியை ஏற்படுத்துவார். ஆரோக்கியத்தை அதிகரிப்பார். எதிர்ப்புகளை இல்லாமல் செய்வார். அரசுவழி முயற்சிகளை சாதகமாக்குவார். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சிகளை வெற்றியாக்குவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வையும் விரும்பிய இடமாற்றத்தையும் வழங்குவார். பொருளாதார நிலையை உயர்த்துவார்.


பொதுப்பலன்: தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வீண் செலவுகள் கட்டுப்படும். வருமானம் உயரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். கையில் பணம் புரளும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.


தொழில்: செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். பணியாளர் ஒத்துழைப்பால் உற்பத்தி அதிகரிக்கும். சிறு குறு தொழில்கள் வளர்ச்சி அடையும். சிலர் புதியதாக தொழில் தொடங்குவீர். இயந்திரம், எலெக்ட்ரானிக், எக்ஸ்போர்ட், பங்கு வர்த்தகம், திரைத்துறை, கெமிக்கல், மெடிக்கல், காண்ட்ராக்ட், ரியல் எஸ்டேட், விவசாயம் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடையும். 


பணியாளர்கள்: வேலைக்கேற்ற ஊதியமில்லை திறமைக்கேற்ற மரியாதை இல்லை என்று மனம் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு உண்டாகும். எதிர்பார்த்த சலுகைகளுடன் வேலையில் உயர்வு கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு வரும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.


பெண்கள்: படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என்று அவரவர் கனவுகள் நனவாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். வேலையின் காரணமாக குடும்பம் ஓரிடம், தான் ஓரிடமாக வாழ்ந்தவர்கள் மீண்டும் குடும்பத்துடன் ஒரே வீட்டில் வாழும் நிலை உண்டாகும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு முதலீட்டிற்கும் முயற்சிக்கும் ஏற்ற ஆதாயம் கிடைக்கும். பொன், பொருளுடன் புகழும் கூடும்.


கல்வி: உயர் கல்வி என்ற இலக்கை எட்ட முடியும். விரும்பிய கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு என்று செல்லும் யோகமும் உண்டாகும்.


உடல்நிலை: ருண ரோக ஸ்தானத்தை ஆயுள்காரகன் சனி பகவான் பார்ப்பதால் நோய் நொடி விபத்து என்று சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். மந்திரம் போட்டதுபோல் உங்களுக்கிருந்த நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும். ஆரோக்கியமாக நடைபோடுவீர்கள்.


குடும்பம்: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். எலியும் பூனையுமாக வாழ்ந்து வந்த கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும், சொத்து சுகம், வாகனம் என்று வாழக்கூடிய நிலை உருவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.


பரிகாரம்: ராஜ கணபதியை வழிபட்டுவர வாழ்க்கை வளமாகும். 


பரணி: உழைப்பால் உயர்வீர்கள்


இரத்தக்காரகன் யுத்தக் காரகனான செவ்வாய், அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ ஆண்டு யோகமான ஆண்டாக இருக்கும். வருடத்தின் முதல் மாதத்தில் உங்கள் ராசிக்குள் ஆத்ம காரகனான சூரியன் உச்சமாக சஞ்சரிப்பதால் வருடத்தின் தொடக்கமே உங்களுக்கு முன்னேற்றமாக இருக்கும். நினைப்பதை எல்லாம் நடத்திக்கொள்ள முடியும். உழைப்பதற்கும் முயற்சிப்பதற்கும் தயங்காத உங்களுக்கு முன்னேற்றப்பாதை தெரியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். பொருளாதார நிலை உயரும்.


சனி சஞ்சாரம்: சனி பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், கடக குருவின் பார்வையாலும், வக்கிர, அஸ்தமன நிலைகளாலும் விரயச்செலவுகள் கட்டுப்படும். விருப்பங்கள் பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். எடுத்த வேலைகள் நடந்தேறும். நோய்நொடிகள் விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். வழக்கு விவகாரங்கள் வெற்றியாகும். ஆரோக்கியம் மேம்படும்.


ராகு - கேது சஞ்சாரம்: கும்ப ராசியில் சஞ்சரிக்கும் ராகு, முடங்கிய முயற்சிகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வியாபாரம் தொழிலில் லாபத்தை அதிகரிப்பார். பணப்புழக்கத்தை ஏற்படுத்துவார். பொருளாதார நிலையை உயர்த்துவார். நவ. 13 முதல் சுக ஸ்தானத்தில் கேதுவும், ஜீவன ஸ்தானத்தில் ராகுவும்  சஞ்சரிப்பதால் வேலைபளு கூடும். தொழிலில் நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். மறைமுகத் தொல்லைகளால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சங்கடங்கள் அதிகரிக்கும்.


குரு சஞ்சாரம்: மிதுனத்தில் மே 26 வரை சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்கும். திருமணம், குழந்தை பாக்யம், வீடு வாகனம் என்ற கனவுகள் நனவாகும். மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கும் குருவால் விரய சனியால் ஏற்படக்கூடிய சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். அக். 20 முதல் சிம்மத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கும் குருவால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். அரசியல் வாதிகளுக்கும், பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போருக்கும் பட்டம் பதவி கிடைக்கும். பணப்புழக்கம் இருக்கும். புதிய சொத்து சேரும். குடும்பத்தில் நிம்மதி, தொழிலில் வளர்ச்சி, உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். 2027 பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கும் குருவால், சனி பகவான் தரும் சங்கடங்கள் விலகும்.


சூரிய சஞ்சாரம்: சனி, ராகு, கேது, குரு கிரகங்கள் ஒருவருக்கு எதிர்மறையாக சஞ்சரித்து பாதகமான பலன்களை வழங்கிடக்கூடிய காலங்களிலும், ராஜ கிரகமான சூரிய பகவான் ஒவ்வொரு ராசியினருக்கும் ஒரு வருடத்தில் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் 122 நாட்கள் மிகப்பெரிய யோகத்தை அளிப்பார். அந்த நிலையில் பராபவ வருடத்தில் ஆனி, புரட்டாசி, தை, மாசி ஆகிய 4 தமிழ் மாதங்களும் உங்களுக்கு ஏற்றம் நிறைந்த காலங்களாகும். முன்னேற்றம் காணும் நேரங்களாக இருக்கும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்பு போட்டி என்பது இல்லாமல் போகும். வம்பு வழக்கு என்ற பிரச்னைகள் முடிவிற்கு வரும். அரசுவழி வேலைகள் சாதகமாகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். புதிய தொழில் அமையும். செய்துவரும் தொழில் லாபம்தரும். சமூகத்தில் அந்தஸ்தும், செல்வாக்கும் உயரும்.


பொதுப்பலன்: விரய ஸ்தானத்தில் சனி சஞ்சரித்தாலும், குருவின் பார்வைகளும், நவ.13 வரை லாப ராகுவும், வருடத்தின் 4 மாதங்கள் சூரியனும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர் என்பதால், படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், வீடு, வாகனம், தொழில் என்ற கனவுகள் நனவாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பணப்புழக்கம் இருக்கும்.


தொழில்: தொழில் காரகன் சனி பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், குருப்பார்வை, வக்கிரம், அஸ்தமனம் என்ற நிலைகளால் செய்துவரும் தொழில் சுபிட்சமாகும். சிலர் புதியதாக தொழில் தொடங்குவீர். ஆடை, ஆபரணம், வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், ஸ்பேர்பார்ட்ஸ், அழகு சாதனங்கள், நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல், மருந்தகம், உணவகம், பெட்ரோலியம், விவசாயம் சார்ந்த தொழில்கள் லாபம் தரும்.


பணியாளர்கள்: தற்காலிகமாக வேலைப்பார்த்து வந்தவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்களுக்கு உழைப்பிற்கும் திறமைக்கும் உரிய மரியாதை கிடைக்கும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் கிடைக்கும்.


பெண்கள்: உடல்நிலை, மனநிலை சீராகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். திருமண வயதினருக்கு கழுத்தில் மாங்கல்யம் ஏறும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். விவாரத்து கேட்டு நீதிமன்றம் வரையில் சென்றவர்களும் மீண்டும் கணவருடன் வாழும் நிலைக்கு வருவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். பொன் பொருள் சேரும்.


கல்வி: பொதுத்தேர்விலும், போட்டித் தேர்வுகளிலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்விக்காக மேற்கொள்ளும்முயற்சி வெற்றியாகும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.


உடல்நிலை: விரய சனி மருத்துவ செலவுகளை உண்டாக்குவார் என்றாலும், ருண ரோக ஸ்தானத்தை சனி பகவானே பார்ப்பதால் பரம்பரை நோய், தொற்றுநோய் என்று அவதிப்பட்டு வந்த நிலை மாறும். தலை, முகம், மூளை, எலும்பு, முடி, பற்களில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உங்களுக்கிருந்த நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும். ஆரோக்கியமாக நடைபோடமுடியும்


குடும்பம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், பிரச்னைகள் விலகும். தம்பதிக்குள் இணக்கமான நிலை இருக்கும். தன்னுடைய குடும்பம் தன்னுடைய பிள்ளைகள் என்ற அக்கறையுடன் செயல்படுவீர்கள். புதிய இடம், வீடு, வாகனம், பிள்ளைகளின் மேற்கல்வி, குடும்பத்தில் சுப நிகழ்ச்சி என்று பணம் செலவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். நீண்டகால கனவுகள் நனவாகும்.


பரிகாரம்: திருவாலங்காடு காளியை வழிபட வாழ்க்கை வளமாகும்


கார்த்திகை: நல்ல காலம் வந்தாச்சு


ஆத்மக்காரகன் சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ ஆண்டில் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும், வசதி வாய்ப்புகள் உருவாகும். 2,3,4ம் பாதத்தினருக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். வேலையில், வாழ்க்கையில், தொழிலில் முன்னேற்றமான நிலை இருக்கும். வருமானம் அதிகரிக்கும், குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.


சனி சஞ்சாரம்: கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு விரய சனியாக சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் வகையிலும் மருத்துவத்திற்காகவும் கையிருப்பு கரையும். 2,3,4ம் பாதத்தினருக்கு வேலை, தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.


ராகு - கேது சஞ்சாரம்: 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, நவ. 13 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, பணப்புழக்கத்தை அதிகரிப்பார், விருப்பங்களைப் பூர்த்தியாக்குவார். தைரியமாக நடைபோட வைப்பார். வியாபாரம் தொழிலில் லாபத்தை அதிகரிப்பார். பொருளாதார நிலையை உயர்த்துவார். 2,3,4ம் பாதத்தினருக்கு,  நவ. 13 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார், எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்குவார், தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார்.


குரு சஞ்சாரம்: 2026 மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கிறார். அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர், 2027 பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் 1 ம் பாதத்தினருக்கு வாழ்க்கை வளமாகும். குடும்பம், தொழில் முன்னேற்றமடையும், சுப நிகழ்ச்சி நடந்தேறும். விரய சனியின் பாதிப்புகள் குறையும். 2,3,4ம் பாதத்தினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும், பொன் பொருள் சேரும், பழைய கடன்கள் அடையும், குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும், சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும்.


சூரிய சஞ்சாரம்: 1ம் பாதத்தினருக்கு, ஆனி, புரட்டாசி, தை, மாசி மாதங்களிலும், 2,3,4ம் பாதத்தினருக்கு, ஆடி, ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களிலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார், சோர்ந்து கிடந்தவர்களையும் சுறு சுறுப்பாக செயல்பட வைப்பார், வீரத்தையும் வேகத்தையும் அளிப்பார். நோய் நொடி வம்பு வழக்கு என்ற நிலைகளில் இருந்து விடுவிப்பார். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சியை வெற்றியாக்குவார், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றத்தையும், எதிர்பார்த்த பதவி உயர்வையும் வழங்குவார், வியாபாரம் தொழிலில் லாபத்தை உண்டாக்குவார், பணவரவை ஏற்படுத்துவார், நிம்மதியையும் சந்தோஷத்தையும் அதிகரிப்பார்.


பொதுப்பலன்: பராபவ ஆண்டு உங்கள் வாழ்வில் நன்மைகள் காணும் ஆண்டாகவே இருக்கும், உங்களுக்கிருந்த நெருக்கடிகள் நீங்கும், நினைத்த காரியங்கள் நடந்தேறும், யோக வாசல் திறக்கும், பொன்னும் பொருளும் சேரும், படிப்பு, வேலை, திருமணம், குழந்தை, சொத்து, சுகம் என்ற கனவுகள் நனவாகும், அரசு பணியில் இருப்பவர்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும் எதிர்பார்த்த இடம் கிடைக்கும்.


தொழில்: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் தடைகள் விலகும், நஷ்டத்தில் இயங்கிவந்த தொழில்களும் லாபமடையும், சிலர் புதியதாக தொழில் தொடங்குவீர். இன்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், அலைபேசி, சினிமா, சின்னத்திரை, யூட்யூப், பங்கு வர்த்தகம், ஆடை ஆபரணம் தொழில்கள் வளர்ச்சி அடையும்.


பணியாளர்கள்: வேலையில் இருந்த பயமும் நெருக்கடியும் நீங்கும். உங்கள் திறமைக்கும் தகுதிக்கும் உரிய மரியாதை கிடைக்கும். நிர்வாகம் உங்களைப் புரிந்து கொள்ளும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலை மீதிருந்த பயம் விலகும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தள்ளிப்போன பதவி உயர்வு கிடைக்கும்.


பெண்கள்: தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்து வந்தவர்களுக்கு பராபவ ஆண்டு யோகமான ஆண்டாக இருக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும், சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். இணக்கமான நிலை ஏற்படும். உடல்நிலை மனநிலை சீராகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பொன் பொருள் சேரும்.


கல்வி: படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலர் வெளி நாடு, வெளி மாநிலம் என்றும் மேற்கல்விக்காக செல்வீர்கள்.


உடல்நிலை: பரம்பரை நோய், தொற்றுநோய், விபத்து என்று மருத்துவ மனைக்கு சென்று வந்தவர்களுக்கு பராபவ ஆண்டு ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய ஆண்டாகும்.  நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும். மருத்துவ செலவு குறையும். 


குடும்பம்: குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். வீடு, வாகனம், சேமிப்பு என்று வசதி அதிகரிக்கும், புதிய வாய்ப்புகள் தேடிவரும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். உறவினர்கள் ஆச்சரியப்படும் வகையில் உங்கள் நிலை உயரும். பிள்ளைகளுக்கு உயர்கல்வி, திருமணம் என்ற முயற்சி வெற்றியாகும்.


பரிகாரம்: சூரியனார் கோவில் சிவசூரியனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும். 

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2026 முதல் 13.4.2027 வரை) »
temple news
ரிஷபம்: கார்த்திகை: நல்ல காலம் வந்தாச்சுஆத்மக்காரகன் சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம்: உழைப்பால் முன்னேறுவீர்கள்தைரிய, வீரிய, பராக்கிரமக்காரகனான செவ்வாயின் ... மேலும்
 
temple news
கடகம்: புனர்பூசம்: உழைப்பால் உயர்வுபொன் பொருள் புகழுக்கு காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆத்மக்காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
கன்னி: உத்திரம்: செயல்களில் கவனம்ஆத்மக்காரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar