தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம்1) ஏற்றமும் இல்லை, தாழ்வும் இல்லை! - 65/100
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2014 06:04
குரு பகவானை ஆட்சி கிரகமாக கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
இந்த ஆண்டு சீரான பலனை காணலாம். அதிக ஏற்றமும் இல்லாமல், தாழ்வும் இல்லாமல் இருக்கும். உங்கள் ஆட்சி நாயகனான குரு, உங்கள் ராசிக்கு7-ம் இடமான மிதுனத்தில் உள்ளார். இது சிறப்பான அம்சம். அங்கு அவரால் பல நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியைத் தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஜூன்13ல், அவர் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். இது சிறப்பானது அல்ல. அங்கு பொருள் விரயத்தையும், வீண் விரோதத்தையும் தரலாம்.ராகு தற்போது 11ம் இடமான துலாமில்,சனிபகவானோடு இணைந்து இருக்கிறார். அவரோடு இவரும் சேர்ந்து நன்மை தருவார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாகஇருப்பர். ஜூன் 21ல், ராகு 10-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் அல்ல. அங்கு பொல்லாப்பையும், பெண்கள் வகையில்தொல்லைகளையும் தரலாம். கேது தற்போது 5-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. இதனால் எதிரிகளின் தொல்லை வரலாம். உடல்நலம் லேசாகபாதிக்கப் படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவைப்படும். கேது ஜூன் 21-ந் தேதி கேது 4-ம் இடமான மீனத்திற்கு மாறுகிறார். இதன் மூலம் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல் நலம் பாதிப்பு வரலாம்.பயணத்தின் போது சற்று கவனம் தேவை. சனிபகவான் தற்போது 11-ம்இடமான துலாமில் உள்ளார். இது சாதகமான இடம். பல்வேறுநன்மைகளைத் தர உள்ளார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். தற்போது சனிபகவான் வக்கிரம் அடைந்துள்ளார். இதனால் அவரால் உங்களுக்கு சாதகமாக முழுமையாக செயல்பட முடியாமல் போகும். அதேநேரம், அவர் வக்கிரம் அடைந்தாலும் துலாம் ராசியில்தான் இருக்கிறார். இதனால் பாதக முடிவு அதிகம் இருக்காது. எனவே கவலை வேண்டாம். டிசம்பர் 16ல், இவர் துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது.சனி 12-ம் இடத்தில் இருக்கும் போது பொருளாதார இழப்புவரலாம். வெளியூர் பயணம்ஏற்படும். எதிரிகளின்இடையூறு அவ்வப்போதுவரலாம். அதற்காக, நீங்கள் அஞ்ச வேண்டாம்.காரணம், சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும்சனியின் 7-ம் இடத்து பார்வை மூலம் நல்ல பொருளாதார வளத்தைக் கொடுப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். கணவன்- மனைவி இடையே அன்பும், பாசமும் நீடிக்கும். மனைவி வகையில் இருந்து வந்த ஊடல் மறையும். உறவினர்கள் வகையிலும் பிரச்னை அகன்றுஅன்யோன்யம் பிறக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு வீட்டில் சில பிரச்னைகள் வரலாம். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும்.திருமணம் போன்ற சுப காரியங்கள் தடைபடலாம்.
தொழில், வியாபாரம்: வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். ஆனால் ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும். போட்டியாளர்கள் சதியை எளிதில் முறியடிக்கலாம். எதிலும் அதிகமுதலீடு செய்ய வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தினால் போதும். பணவிரயம், பணம் திருட்டு போன்றவை தடுக்கப்படும். வெளியூர் பயணம் அனுகூலம் தரும். ஜூன் முதல் அரசின் உதவி கிடைப்பது அரிதாகும். புதிய தொழில் தொடங்க வேண்டாம்.
பணியாளர்கள்: ஜூன் வரை சிறப்பான நிலை இருக்கும். புதிய பதவி கிடைக்கப் பெறலாம். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். ஜூலை முதல் வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம். கோரிக்கைகளை அதிக முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியது இருக்கும்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புகழ் செல்வாக்கு உயரும்.
அரசியல்வாதிகள்: கடும் முயற்சி செய்தாலும், பதவி கிடைப்பது சிரமமாகவே இருக்கும்.
மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் மேன்மையும், ஜூன் முதலான அடுத்த கல்வி ஆண்டில் சிரத்தை எடுத்தும் படிக்க வேண்டியிருக்கும்.
மேலும்
தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »