கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) ஜீன் வரை யம்மா ஜீலை முதல் சும்மா! - 65/100
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2014 06:04
சூரியன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோரைநட்பாக கொண்ட கும்ப ராசி அன்பர்களே!
குரு-கேதுவால், இந்த ஆண்டு தொடக்கம்உங்களுக்கு பிரகாசமாக அமையும். குருபகவான் தற்போது 5-ம் இடமான மிதுன ராசியில் இருக்கிறார். அங்கு பொருளாதார வளத்தையும், சுபங்களையும் தருவார். ஜூன்13ல், அவர் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். 6-ம் இடமான அங்கு அவர் மனதில் தளர்ச்சியையும், உடல் உபாதைகளையும் தரலாம். செலவு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். மதிப்பு,மரியாதை சுமாராகத்தான் இருக்கும். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.ராகு தற்போது 9-ம் இடமான துலாமில் சனிபகவானோடு உள்ளார். அவரால் முயற்சிகளில் தடை, எதிரிகளின் இடையூறு போன்றவை இருக்கும். ஜூன்21ல் இவர் 8-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். அங்கு முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பை ஏற்படுத்தலாம். கேது தற்போது 3-ம் இடமான மேஷத்தில் இருந்து இறை அருளையும், காரிய அனுகூலத்தை யும் கொடுத்து கொண்டிருக்கிறார். அவர் ஜூன்21ல் இடம் பெயர்ந்து மீனத்திற்கு வருகிறார். இதனால் பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும்.சனி பகவான் 9-ம் இடமான துலாம் ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் என்றுசொல்ல முடியாது. இங்கு அவர் இருக்கும்போது, உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம்; எதிரிகளின் இடையூறு தலைதூக்கும்; பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். இந்த கெடுபலன்களை கண்டு அஞ்ச வேண்டாம். சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். அவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்த மூன்று பார்வைகளும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. டிசம்பர் 16ல், அவர் துலாமில் இருந்துவிருச்சிகத்திற்கு மாறுகிறார். 10-ம் இடமான அங்கு அவரால் சிறப்பான பலனை தர இயலாது. தொழிலில் சிறுசிறு பின்னடைவுகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு முன்பு போல் இல்லாமல் போகலாம். உடல் உபாதைகள் லேசாகநோகச் செய்யலாம்.ஆண்டின் தொடக்க காலத்தில் மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பும் நிலவும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளையும் பெறுவீர்கள். சிலர் முயற்சி எடுத்து வீடு, மனை வாங்கலாம். ஜூனுக்கு பிறகு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம்.தொழில், வியாபாரம்: ஜூன் வரை தொழில்,வியாபாரத்தில் தடையில்லா வளர்ச்சி இருக்கும். லாபத்துக்கு குறை இருக்காது. அரசிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். ஜூலை முதல் லாபம் பெற அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பணவிரயம் ஆகலாம். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். புதிய வியாபாரம் வேண்டாம். போட்டியாளர்களின் இடையூறு தலைதூக்கலாம்.
பணியாளர்கள்: ஜூன் வரை பணியில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் திறமை மேம்படும். இடமாற்ற பீதி இருக்காது. புதிய பதவிகளை பெறலாம். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சிலர் அதிகாரமிக்க பதவிக்கு உயர்த்தப்படுவர். ஜூலை முதல் வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். மேல் அதிகாரிகளிடம்அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம்.
மாணவர்கள்: இந்த ஆண்டு சிறப்பான பலனைகாணலாம். போட்டிகளில் வெற்றிகாணலாம். ஜூனில் துவங்கும் அடுத்த கல்வி ஆண்டில்தீவிர முயற்சி எடுத்தால்தான் நல்ல முன்னேற்றம் காணலாம். இந்த ராசி மாணவர்களின் பெற்றோர்,தங்கள் மகனின் நண்பர்கள் வட்டாரம் நல்லது தானா என்பதை கவனித்து வரவேண்டும்.
கலைஞர்கள்: ஜூன் வரை பெயரும், புகழும்கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தம்கிடைக்கும். ஜூலை முதல் புதிய ஒப்பந்தங்கள் முயற்சியின் பேரில் பெறலாம்.
அரசியல்வாதிகள்: பிரதிபலனைஎதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். அதிக லாபம் இராது.
விவசாயிகள்: அதிகமாக உழைக்கவேண்டியதிருக்கும். நெல், கோதுமை, கடலை பயிர்களில் நல்ல விளைச்சல் காணலாம். வழக்கு விவகாரங்கள்சாதகமாக அமையும்.
பெண்கள்: குடும்பத்தில் மகிழ்ச்சிகாண்பர். பிறந்த வீட்டில்இருந்தும் பொருட்கள் வரும்.உறவினர்கள் ஒன்று சேருவர்.விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். சிலருக்கு கோயில்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். வயிறு தொடர்பான உபாதை வரலாம். பிள்ளைகள்உடல் நலம் தேறும்.
பகிர்கcopied
மேலும்
தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2026 முதல் 13.4.2027 வரை) »