பாகூர் :புதுச்சேரி அடுத்த, அரியாங்குப்பம் சுப்பையா நகரில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் 12 ம் ஆண்டு பங்குனி உத்திரம் காவடி உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் பாலமுருகன், விநாயகர் சாமிகளுக்கு அலங்கரித்து ஊர்வலம் நடந்தது. 13ந் தேதி காலை 9 மணிக்கு காவடி பூஜை மற்றும் அலகு குத்தும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.