திருநகர் : மதுரை விளாச்சேரி அக்ரஹாரம் பட்டாபிஷேக ராமர் கோயிலில், ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, இன்று(ஏப்., 8) காலை 7 மணி முதல், நாளை வரை 24 மணிநேர தொடர் ராம நாம ஜெபம் நடக்கிறது. இதில் கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி, சுதர்சன, ராமச்சந்திர ஹோமம் ஆகியவை, தேவ பாடசாலை குருக்கள் சங்கர் சர்மா தலைமையில் நடக்கிறது. பக்தர்கள் பூஜை பொருட்களை வழங்கலாம் என, கோயில் நிர்வாகிகள் விஸ்வநாதன், சங்கரநாராயணன், கண்ணன், மரகதவல்லி தெரிவித்தனர்.