அன்னுார் : அன்னுார் கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் ஒன்பதாம் ஆண்டு ராமநவமி விழா நடக்கிறது. இன்று துவங்கி தினமும் இரவு 7.00 மணி முதல் 8.30 மணி வரை 10 நாட்களுக்கு கம்ப ராமாயண தொடர் சொற்பொழிவு நடக்கிறது. புலவர் ராமசாமி தினம் ஒரு தலைப்பில் பேசுகிறார். 17ம் தேதி காலை 10.00 மணிக்கு நிறைவு சொற்பொழிவு நடக்கிறது. சிறப்பு அபிஷேகம், அன்னதானம் வழங்குதல் நடக்கிறது. மாலையில் சுவாமி திருவீதியுலா முக்கிய வீதிகளில் நடக்கிறது. 18ம் தேதி ஸ்ரீராமானுஜர் வாழ்வும்-வழியும் என்கிற தலைப்பில் புலவர் ரவீந்திரன் பேசுகிறார். ஏற்பாடுகளை ஸ்ரீராமானுஜ பக்த பேரவையினர் செய்து வருகின்றனர்.