பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2014 02:04
பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில், சவுந்தரவல்லி தாயாருக்கு, 20ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடந்தது. காலை 6 மணிக்கு தாயாருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மாலை 6 மணிக்கு பெருமாள் விஸ்வரூப தரிசனத்திலும், தாயார் ஏகாந்தசேவையில் அருள்பாலித்தனர். ஏற்பாடுகளை கல்யாண சவுந்தரவல்லி தாயார் லட்சார்ச்சனை குழுவினர் செய்திருந்தனர்.