திருப்பூர் விசித்திர வீர ஆஞ்சநேயர் கோயிலில் கோமாதா பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2014 01:04
வெள்ளக்கோவில் : திருப்பூர், முத்தூர் விசித்திர வீர ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு நேற்று 108 கோமாதா பூஜை நடைபெற்றது.இக்கோயிலில் ஆண்டு தோறும் ராம நவமியன்று கோமாதா பூஜை நடைபெறுவது வழக்கம்: பூஜைக்காக ஈரோடு, முத்தூர், வெள்ளக்கோவில் பகுதிகளிலிருந்து ஏராளமான பசுக்களும், காளைகளும் கொண்டு வரப்பட்டன இவைகளுக்காக மாலை மரியாதை, தீபாராதனை காட்டி, தீவனங்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவின் போது மாடுகளின் உரிமையாளர்களும் கெளரவிக்கப்பட்டனர்.