மேலுார் : மேலுார் நொண்டிக்கோவில்பட்டி அருகே பர்மா காலனியில் பாலமுருகன் கோவில் உள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடந்தது. மழை வேண்டி குழந்தைகள் முதல் பெண்கள் வரை நுாற்றுக்கும் மேற்பட்டோர் மண் சோறு சாப்பிட்டனர். இதனால் மழை பெய்து, எல்லா வளமும் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.