பதிவு செய்த நாள்
15
ஏப்
2014
01:04
திருப்பூர் : சின்னாண்டிபாளையம் சித்ரகுப்தர் கோவிலில், இந்தாண்டுக்கான சித்ரா பவுர்ணமி பூஜை, வரும் மே 14ல் நடைபெற உள்ளது.சித்ரகுப்தர் கோவில் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:சின்னாண்டிபாளையத்தில் உள்ள சித்ரகுப்தர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம், பவுர்ணமி நாளில், சித்ரா பவுர்ணமி பூஜை சிறப்பாக நடைபெறும். ஜய வருடம், சித்திரை மாதம், இரண்டு பவுர்ணமி வருவதால், கோவிலில் பூஜை எப்போது என பக்தர்கள் குழப்பத்தில் உள்ளனர்.முதலில் வரும் பவுர்ணமி, சித்திரை 1, 2ம் தேதிகளிலும், இரண்டாவது பவுர்ணமி, சித்திரை 31ம் தேதியும் வருகிறது. சித்ரகுப்தர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா, வரும் சித்திரை 31ம் தேதி (மே 14ல்) நடைபெறும்.