பதிவு செய்த நாள்
21
ஏப்
2014
12:04
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, நேதாஜி ரோடு, முனிசிபல் சத்திரம், ஸ்ரீமுனியப்பசுவாமி, ஸ்ரீமகா முனீஸ்வரன் சுவாமி கோவில், 58ம் ஆண்டு திருவிழா, ஏப்ரல், 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. ஏப்ரல், 23ம் தேதி மாலை, நான்கு மணிக்கு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் மற்றும் பால் குடம் ஊர்வலமும், ஏப்ரல், 24ம் தேதி சுவாமிக்கு விஷேச பூஜை நடக்கிறது. ஏப்ரல், 25ம் தேதி, மதியம் பொங்கல் வைத்தல் மற்றும், மதியம் ஒரு மணிக்கு அன்னதானம் நடக்கிறது. 26ம் தேதி, மஞ்சள் நீராட்டு, காவிரியில் கம்பம் விடுதல் மற்றும் மறுபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.