மகா பிரத்தியங்கிராதேவிக்கு நிகும்பலா யாகம்: திரளான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2014 10:04
மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில் ஸ்ரீ மகா பிர த்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. இங்கு அம்மாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பானது. இந்த யாகத் தில் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்தால் சத்ரு உபாதைகள் நீங்கும். சித்திரை மாத அம்மாவாசையான நேற்று காலை 8 :30 மணிக்கு ஸ்ரீ மகா பிரத்தியங்கிராதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோயில் மண்டபத் தில் எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதியம் 12:30 மணிக்கு தண்டபானி குருக்கள் யாகத்தில் மிளகாய் வற்றலை கொட்டி நிகும்பலா யாகத்தை நடத்திவைத்தார். இதில் திரளான பக்தர்கள் க லந்து கொண்டு அம்பாளை தரிசித்தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர்குருக்கள் செய்திருந்தார்.கும்பகோணத் திலிருந்து அய்யாவாடிக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாச்சியா ர்கோயில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.