திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள கூத்தூர் ஸ்ரீ பூர்ணா, புஸ்கலா சமேத ஸ்ரீ தர்ம சாஸ்தா (ஸ்ரீஐயப்பன்) கோயில் குடமுழுக்கு நேற்று நடைபெற்றது. இக் கோயில் வளாகத்தில் ஸ்ரீ சாந்தப் பிள்ளையார், ஸ்ரீ கருப்பண்ணசாமி, ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி சன்னதிகள் உள்ளன. கோயில் ராஜகோபுரம், விமானங்கள் உள்ளிட்டவை சுமார் ரூ. 1 கோடியில் புதுப்பிக்கப்பட்டு தற்போது குடமுழுக்கு நடைபெற்றது. நேற்று காலை குடமுழுக்கு நடைபெற்றது.தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனையும், அதைத் தொடர்ந்து பிரசாதம் வழங்குதல், அன்னதானம், மாலையில் திருக்கல்யாண உற்சவம் ஆகியன நடைபெற்றன.