உளுந்தூர்பேட்டை: நைனாக்குப்பம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேரோட்டம், சாகை வார்த்தல் திருவிழா நாளை நடக்கிறது. உளுந்தூர்பேட்டை தாலுகா நைனாக்குப்பம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேரோட்டம், சாகை வார்த்தல் திருவிழா நாளை நடக்கிறது. கடந்த 1ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினசரி இரவு அம்மன் சிறப்பு அலங்காரம் செய்த வீதியுலா நடந்தது. நாளை (9ம் தேதி) மதியம் 1 மணிக்கு சாகை வார்த்தலும், செடல் மற்றும் தேரோட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர். 10ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.