பதிவு செய்த நாள்
09
மே
2014
01:05
மானாமதுரை : மானாமதுரையில், சதாசிவ பிரம்மேந்தராளின் ஆராதனை துவக்க விழா நடந்தது. மானாமதுரை, ஆனந்தவல்லி சோமநாதர் கோவில் சன்னதியில், உள்ள சதாசிவ பிரம்மேந்தராள் 34ம் ஆண்டு ஆராதனை விழா, உண்ணாமலை மகாலில் நடந்தது. துவக்க நாள் விழாவில், பேராசிரியர் அய்க்கண், "குருமகிமை என்ற தலைப்பில் துவக்க உரையாற்றினார். கர்நாடக இசை கலைஞர்கள் அக்ஷய் பத்மநாபன், அஸ்வத் ஸ்ரீமான், கமலா பாலசுப்பிரமணியம், சுதா, ரேணுகா, பத்மாசினி, ஸ்ரீநிசா, ப்ரியங்கா, கஸ்தூரி, ரங்காச்சாரி மற்றும் பக்கவாத்திய கலைஞர்கள் லஷ்மி நாராயணன், வினித், குரு ராகவேந்திரா, ராகுல், சுப்பிரமணியன், ஜானகி வல்லபன் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில், கர்நாடக இசையில் சிறந்து விளங்கிய வாய்ப்பாட்டு கலைஞர்கள் சீதா நாராயணன், மோர்சிங் வித்வான் கிருஷ்ணன் ஆகியோரை பாராட்டி, வேதியரேந்தல் ஞானபிரகாச சுவாமிகள் பரிசுகள் வழங்கினார். காரைக்குடி சங்கரசேது எழுதிய அருட்பிராவகம் நூல் வெளியிடப்பட்டது. விழா குழு தலைவர் நாராயணசுவாமி, உப தலைவர்கள் ஜவஹர், ராமய்யா, முருகேசன், செயலாளர்கள் முரளி, வைத்யநாதன், இணை செயலாளர்கள் ஜெய்சங்கர்,ராதாபார்த்தசாரதி, பொருளாளர் ஸ்ரீவித்யா ராஜகோபால் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.