நாகர்கோவில் : திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் தினமும் காலையும், மாலையும் சுவாமி பவனி, சமய சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. நேற்று காலை 7 மணிக்கு திருத்தேரில் சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து திருத்தேர்வடம் தொட்டு இழுத்தலும், தேரோட்டமும் நடந்தது. குமரி மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். ஏராமளான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இரவு 10 மணிக்கு சுவாமி ரிஷப வகானத்தில் பவனி வருதல், சப்தவர்ணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று மாலை 6 மணிக்கு சுவாமி ஆராட்டுக்கு கருட வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது.