வள்ளியாமடத்து இசக்கியம்மன் கோயிலில் 1808 பொங்கல்வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2014 03:05
நாகர்கோவில் : ஒழுகினசேரி வள்ளியாமடத்து இசக்கியம்மன் கோயில் 10-வது வருடாபிஷேக விழா நேற்று நடந்தது. காலை 5.30 மணிக்கு ஒழுகினசேரி ஆராட்டு துறையில் இருந்து பக்தர்கள் பால்குடம் பவனிவருதல், 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 12 மணிக்கு அலங்கார தீபாரதனை ஆகியவை நடந்தது. பகல் 1 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை 4 மணிக்கு 1806 பானைகளில் பொங்கல் வழிபாடு நடந்தது. பொங்கல் வழிபாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் குத்துவிளக்கு மற்றும் பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது. பொங்கல் வழிபாட்டை அமைச்சர் பச்சைமால் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிவசெல்வராஜன், நாஞ்சில் முருகேசன் எம்எல்ஏ, நகர செயலாளர் ஞானசேகர், அண்ணா தொழிற்சங்க செயலாளர் காரவிளை செல்வன். முன்னாள்எம்எல்ஏ ராஜன், பாசறை செயலாளர் ஜெயசீலன், தொகுதி செயலாளர் சுகுமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அக்ஷயா கண்ணன் செய்திருந்தார்.