சிவதாண்டவ பாறை ருத்ரலிங்கேஸ்வரர் கோயிலில் மண்டல பூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2025 11:10
கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ரலிங்கேஸ்வரர் கோயிலில் நடந்த மண்டல பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவையொட்டி நேற்று முன்தினம் ருத்ர லிங்கேஸ்வரர் கோயிலில் திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகள், பெரியவர்கள் என 50க்கு மேற்பட்ட சிவனடியார்கள் குழுவாக 658 திருவாசக பாடல்களை பாடினர். நேற்று கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பஞ்சகவ்ய யாகம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தது. ருத்ர லிங்கேஸ்வரர், ருத்ர பரமேஸ்வரி அம்மனுக்கு பசும்பால், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.