பெரும்பாலான பெருமாள் கோயில்களில் வெள்ளி அல்லது தங்கமுலாம் பூசிய எடை குறைந்த ஜடாரிகளைக் கொண்டே பெருமானின் திருவடி ஆசி பெற்றிருப்பீர்கள். ஆனால் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான மதுரை கூடலழகப் பெருமாள் கோயிலில் ஒரு கிலோ எடையுள்ள தங்க ஜடாரி உள்ளது. வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமே இந்த ஜடாரியைக் கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கப்படுகிறது. பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடிய இத்தலத்தில் அவருக்கு காட்சி தந்த மகாவிஷ்ணு, ஐஸ்வர்யம் தரும் தனது பாத தரிசனத்தை காட்டி அருளினார். அதன் நினைவாக இங்கு ஜடாரி சேவை சாதிக்கிறார்கள்.