மும்பை வந்த காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்; பூர்ணகும்ப மரியாதை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2025 03:11
மும்பை ; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் இன்று பிற்பகல் மும்பை வந்தார். மும்பைக்கு வந்தடைந்ததும் பூர்ணகும்பம் மற்றும் வேத முழக்கங்களுடன் சுவாமிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிகள் காஞ்சி மகா பெரியவர் சிலைக்கு மலர் தூவி வழிபட்டார். பூஜ்ய ஜகத்குரு சுவாமிகள் நாளை (27ம் தேதி) எஸ்ஐஇஎஸ் இல் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோவிலின் மஹாகும்பாபிஷேகத்தை காலை 11 மணி முதல் 12 மணி வரை நடத்துகிறார்.