அபிராமி அம்மன் கோயில் ராஜகோபுரம் நிலைக்கால் நடுதல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2014 12:05
திண்டுக்கல் : திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் ராஜகோபுரம் நிலைக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. நகர மக்களின் உதவியோடு, ரூ.20 கோடியில் அபிராமி அம்மன் கோயில், கட்டும் பணி நடந்து வருகிறது. 52 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி துவங்க உள்ளது. இதற்காக, மொத்தம் ஐந்து நிலைக்கால்கள் ஊன்றப்பட உள்ளன. நேற்று காலை 8 மணிக்கு நிலைக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. முதல்கட்டமாக, இரண்டு நிலைக்கால்கள் நடப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. ஒவ்வொரு கல்லும் 16 அடி உயரமும், ஆறு டன் எடையும் கொண்டதாக இருந்தது. அமைச்சர் விசுவநாதன், உதயகுமார் எம்.பி., திருப்பணிக்குழு தலைவர் வேலுச்சாமி, ஸ்தபதிகள் பாஸ்கரன், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.