சிங்கம்புணரி : சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார்கோயிலில், வெள்ளி ரதம் செய்யும் பணிகள் துவக்குவதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று துவங்கியது. சின்னையா சிவாச்சாரியார் யாகசாலை பூஜைகள் நடத்தினார். இக்கோயிலில், வெள்ளி ரதம் செய்வதற்காக,பொதுமக்கள், பக்தர்கள் பங்களிப்பாக 170 கிலோ வெள்ளியில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் ரதம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு, 5 அடி உயர தேக்கு மரத்தில் ஆன ரதத்திற்கு ஜூன்12 ல் வெள்ளி கவசம் பொருத்தும் பணி துவங்க உள்ளது. இது, 4 மாதங்களில் முடியும். ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.