மந்திரங்களில் சிறந்த காயத்ரியை, வேதத்தின் தாயாகப் போற்றுவர். இதன் அதிதேவதையான காயத்ரி தேவியை உயர்ந்த சக்தியாகவும், ஐந்து முகம் கொண்டவளாகவும், தாமரை மலரில் வீற்றிருப்பதாகவும் குறிப்பிடுவர். அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில்(4.30-6.00) கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து, காயத்ரி மந்திரம் சொல்வது சிறப்பு. புருவநடுவிலோ அல்லது இதயத்திலோ காயத்ரிவீற்றிருப்பதாக எண்ணியபடி, 108 முறைஜெபித்தனர். இதனால், நல்லறிவு, மனஉறுதி,முகப்பொலிவு, உடல்நலம் உண்டாகும்.மனம் தூய்மைபெற மகத்தான இதை விடசிறந்த வழி வேறில்லை என சிவானந்தர்குறிப்பிடுகிறார். ""ஓம் பூர்புவஸ்ஸுவ தத் ஸவிதுர் வரேணியம்பர்கோ தேவஸ்ய தீமஹிதியோ யோ நஹ ப்ரசோதயாத்என்பதே காயத்ரி மந்திரம். ""எல்லா பாவங்களையும், அறியாமையையும் போக்குபவரே! வணக்கத்திற்குரியவரே! உலகைப் படைத்தகடவுளே! உமது புகழை நாங்கள்தியானிக்கிறோம். நீங்கள் எங்கள் புத்தியைநெறிப்படுத்த வேண்டும், என்பதுஇதன் பொருள்.