உலகில் பணத்துக்கு ஆசைப் படாத மனிதர்கள் கிடையாது. பணம் ஒரு பாக்கியம் என்று நினைக்கிறார்கள். ஆனால், அந்தப் பணம் தான் எல்லா கொடுமைகளுக்கும் பிரச்னை களுக்கும் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. உலகில் மக்களால் கண்டிக்கப்படாத பணக்காரனும், தற்பெருமை இல்லாத வீரனும், எல்லாருக்கும் சரிசமமாக நீதி வழங்கும் தலைவனும் கிடையாது.எப்படி, கிணற்றுக்குள் பூத்த பூவால் யாருக்கும் பயனில்லையோ, அதுபோல் பணத்தால் பெரிய பயன் கிடையாது. எப்படி நெருப்பினால் சுடப்பட்ட வயதான பெண்மணி ஓரிடத்தில் நிற்கமாட்டாளோ, அதுபோல செல்வமும் ஓரிடத்தில் நிலைத்து நிற்க முடியாது.