நத்தம் : நத்தம் ஒன்றியம் மற்றும் நகர பா.ஜ., சார்பில், பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றத்தை முன்னிட்டு ந.கோவில்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிப்பாடு நடந்தது. இதில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம், அர்ச்சனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நத்தம் ஒன்றியம் தலைவர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய தலைவர் ஜெயபாலன், முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன், நிர்வாகிகள் வேலாயுதம், சுதாகர், மாவட்ட இந்து முன்னணி துணைத்தலைவர் செல்லமணி உட்பட பலர் பங்கேற்றனர்.