பதிவு செய்த நாள்
02
ஜூன்
2014
01:06
துறையூர்: உப்பிலியபுரம் அன்பு நகரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. முதல் நாள் நிகழச்சி, காலை முகூர்த்த கால் ஊன்றுதல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இரண்டாம் நாள் மாலை, வேம்படியான் திருவீதி உலா, குடி அழைத்தல், சக்திகரகம், பூங்கரகம் பாலித்தல் நடந்தது. மூன்றாம் நாள், மாரியம்மன் அன்ன வாகனத்திலும், மதுரை வீரன், வேம்படியான் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. நான்காம் நாள் மாவிளக்கு பூஜை, முளைப்பாரி எடுத்தல் நடந்தது. நிறைவு நாளில் அலகு குத்துதல், மஞ்சள் நீராட்டுதல், விடையாற்றி, குடிவிடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.