பதிவு செய்த நாள்
02
ஜூன்
2014
01:06
தர்மபுரி: தர்மபுரியில், ஹரி ஸ்ரீ சாய்பாபா கோவில் கட்டுவதற்கான பூமி பூஜைக்காக, யாக சாலை அமைக்கும் நேற்று நடந்தது. தர்மபுரி கொல்லஹள்ளி சாலையில், புதிதாக ஹரி ஸ்ரீ சாய்பாபா கோவில் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை மற்றும் யாக பூஜைகள் வரும், 4ம் தேதி காலை, 6 மணிக்கு நடக்க உள்ளது. பூமி பூஜையை முன்னிட்டு, யாக சாலை அமைக்கும் பணி நேற்று நடந்தது. வரும், 4ம் நடக்கும் பூமிபூஜையில், சாய்பாபா பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க விழாக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, ஹரி ஸ்ரீ சாய்பாபா கோவில் கட்டுமான குழு தலைவர் ராஜன்பாபு, துணைத் தலைவர் பூபதி, செயலர் பாலமுரளி, பொருளாளர் செந்தாமரைச் செல்வி மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். கோவில் அமைக்க, சுமார், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை தானமாக வழங்கிய பூபதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ஹரி ஸ்ரீ சாய்பாபா கோவில் கட்டுமான குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.