திருநள்ளார் சனிஸ்வர பகவான் பிரமோற்ச விழா: செண்பக தியாராஜர் நடனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2014 03:06
காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவில் பிரமோற்ச விழாவில் செண்பக தியாராஜர் உன்மத்த நடனத்துடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இக்கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது. கடந்த 26ம் தேதி முதல் 27ம் தேதி வரை விநாயகர் உற்சவமும், 28 மற்றும் 30ம் தேதி சுப்ரமணியர் உற்சவமும், கடந்த 1ம் தேதி இரவு அடியார் நால்வர் உற்சவம் நடந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று இரவு செண்பக தியாராஜர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். இன்று காலை 11 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட செண்பக தியாராஜ சுவாமிகள் உன்மத்த நடனத்துடன் வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தியாகராஜர் சுவாமியை வழிப்பட்டனர். 6ம் தேதி தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. 8ம் தேதி காலை 7 மணிக்கு செண்பக தியாகராஜர் தேரில் எழுந்தருள தேர் திருவிழா, 9ம் தேதி சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் சகோபுர வீதியுலா,10ம் தேதி இரவு தெப்போற்சவம், 11ம் தேதி விசாக தீர்த்தம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினம் செய்து வருகின்றனர்.