தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது சாலமலை. அனுமன் சஞ்சிவி மலையைத் தூக்கிவந்தபோது இதிலிருந்து விழுந்த கல்தான் இந்த சாலமலை. ஜெகஜ்ஜால மலை என்ற பெயர் மருவி சாலமலை என்றானதாம். இந்த மலையின் <உச்சியில்தான் குடிக்கொண்டிருக்கிறார் சஞ்சீவி பெருமாள், லட்சுமி மற்றும் நாச்சியார் சகிதம். பஞ்சபாண்டவர்கள் வனவாசம் போனபோது இங்கு வந்து தங்கியிருந்தனராம். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மட்டும் கோயில் திறந்திருக்கும். மற்ற நாட்களில் கோயில் பூட்டியிருக்கும். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து தொட்டில் கட்டி தொடர்ந்து ஏழு சனிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் கிட்டும் என்கின்றனர்.