கங்கை பூவுலகை முதலில் தொட்ட இடம், கங்கோத்ரி, கங்கையின் வலது கரையில் கங்கோத்ரிக்கான ஒரு கோயில் உள்ளது. இருபதடி உயரத்திலுள்ள இந்த அழகிய கோயில் வெள்ளை கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. அட்சய திருதியை அன்று திறக்கப்படும் இக்கோயில் தீபாவளி முடிந்த பிறகு மூடப்படும். பனி உறைந்து கிடக்கும் போது, அங்கிருந்து 25கி.மீ. தொலைவில் கீழே இருக்கும் முகிமடம் என்ற கிராமத்துக்கு கங்கோத்ரி சிலை எடுத்துச் செல்லப்படுகிறது.