விழுப்புரம்: விழுப்புரம் ரங்கநாதன் வீதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவிலில் வரும் 13ம் தேதி குரு பெயர்ச்சி ஹோமம் நடக்கிறது. விழுப்புரம் ரங்கநாதன் வீதியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் வரும் 13ம் தேதி மதியம் 3:20 மணிக்கு நவக்கிரக குரு பெயர்ச்சி ஹோமம், சிறப்பு அபிஷேகம், கலசாபிஷேகம் நடக்கிறது. மாலை 5:57 மணிக்கு குரு பகவான் மிதுன ராசியிலிருந்து, கடக ராசிக்கு பெயர்ச்சியாவதையொட்டி, சிறப்பு அர்ச்சனை நடக்கிறது. அனைத்து ராசிக்காரர்களுக்கும், சிறப்பு பரிகார பூஜைகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சித்தி விநாயகர் ஆலய வழிபாட்டு மன்ற குழுவினர் செய்து வருகின்றனர்.