பதிவு செய்த நாள்
05
ஜூன்
2014
02:06
கடம்பத்துார் : வெண்மனம்புதுார் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்ட வெண்மனம்புதுார் கிராமம், அன்னை இந்திரா நகரில் அமைந்துள்ளது, அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில். இந்த கோவில் புனரமைக்கப்பட்டு, புதிதாக அமைக்கப்பட்ட, பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம், நேற்று காலை 7:20 மணிக்கு நடந்தது. முன்னதாக, கடந்த 2ம் தேதி காலை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து, கணபதி ஹோமம், தன பூஜை, புதிய சிலைகளுக்கு கரிவலம் வருதல் போன்றவையும், அன்று மாலை காப்பு கட்டுதலும், முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது. கடந்த 3ம் தேதி காலை, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், புதிய சிலைகளுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. பின், நேற்று காலை, நான்காம் கால யாகசாலை பூஜையும், மகா தீபாராதனையும், பின், கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின், அன்னதானம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.