பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையத்துக்கு ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் வருகை தந்துள்ளார். வைணவ ஆச்சார்ய பீடங்களில் ஒன்றானஸ்ரீ ரங்கத்தில் உள்ள ஸ்ரீ முஷ்ணம் ஆண்டவன் சுவாமிகள் ஆசிரம பீடாதிபதி ஸ்ரீரங்க ராமானுஜ மகாதேசிகன் சுவாமிகள் பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் ஆசிரமத்துக்கு வருகை தந்துள்ளார். இவருக்கு கோவை மாவட்ட பாதுகா சேவா சமிதி சார்பில் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசிரமத்தில் தினமும் காலை சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மாலையில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு ராமானுஜாச்சாரியா மற்றும் ராமப்பிரியா குழுவினரின் வயலின் நிகழ்ச்சியும், நாளை சந்தீப் நாராயணனின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆண்டவன் சுவாமிகளிடம் அருளாசி பெறலாம் என பாதுகா சேவா சமதி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.