அமாவாசை, பவுர்ணமி இந்த இருநாட்களுமே குலதெய்வ வழிபாட்டுக்கு உகந்ததே. என்றாலும், அந்தந்த கோயிலில் பெரியவர்கள் வகுத்திருக்கும் மரபைப் பின்பற்றி வழிபடுவது நல்லது. சில கோயில்களில் அமாவாசையில் வழிபடுபவர்கள், பவுர்ணமியில் வழிபடுபவர்கள் எனஇருவித வகையினரும் இருப்பதுண்டு. சிவ கோத்திரத்திற்கு அமாவாசை வழிபாடும், விஷ்ணு கோத்திரத்திற்கு பவுர்ணமிவழிபாடும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.