விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இருந்து சங்கரன் கோயில் செல்லும் வழியில் உள்ளது சோழபுரம். இங்குள்ள வெட் காளியம்மன் கோயிலில் அம்மன் பத்துக் கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். இந்த அம்மனை 48 படிகளைக் கடந்துதான் தரிசிக்கமுடியும். பாசிப் பயிறு, கம்புப் பயிறு ஆகியவற்றை முளைக்க வைத்து இந்த அம்மனை வழிபட்டால் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்கிறார்கள்.