ஆதிசங்கரர் அருளிய அற்புத கேள்வி பதிலைப் படியுங்கள். ஆனந்த வாழ்க்கை வாழுங்கள்.மரியாதைக்குரியவர் யார்? யாரிடமும் எதையும் வேண்டாதவர்.எது சுகம்?நல்லவர்களின் நட்பு.உலகை வெல்ல எவரால் முடியும்?உண்மையும் பொறுமையும் உடையவரால்.எவரை தேவர்களும் வணங்குவார்கள்?கருணை <உடையவரை.மனிதனுக்கு எது அலங்காரம்?நல்ல குணங்கள்.பேச்சிற்கு அழகு எது?உண்மை.கடவுளுக்கு யாரிடம் பிரியம்?தானும் கவலைப்படாமல், பிறருக்கும் கவலை உண்டாக்காதவரிடத்தில்.தெய்வம் என்பது என்ன? அவரவர் செய்த புண்ணியம். உடலுக்கு பாக்கியம் எது?ஆரோக்கியம்.பிரத்யக்ஷ தேவதை(கண்கண்ட தெய்வம்) யார்?தாய்.பூஜிக்க வேண்டிய குரு யார்?தந்தை.