பதிவு செய்த நாள்
01
ஜூலை
2014
12:07
ஆர்.கே.பேட்டை : ஆர்.கே.பேட்டை, சுந்தரவல்லி, விஜயவல்லி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில். புதிய கொடிமரம் பிரதிஷ்டை மற்றும் துவாரபாலர்கள் பிரதிஷ்டை வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள், ஆறு மாதமாக நடந்து வருகின்றன. வியாச முனிவருக்கு அகல்யா சாப விமோசனம் தந்து, பெருமாள் காட்சியளித்த தலம் என, தல வரலாறு கூறுகிறது.ஐநுாறு ஆண்டு கால பழமை வாய்ந்த இந்த கோவில், 1987ல், புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூன்று கால பூஜையும், மார்கழி உற்சவம், சித்திரை பிரம்மோற்சவம் உள்ளிட்ட வைபவங்கள் நடந்து வருகின்றன.வரும் 15ம் தேதி காலை 9:00 மணிக்கு மகா சாந்தி, பூர்ணாஹூதி, கும்ப ஆராதனம் உள்ளிட்டவையும், மறுநாள் காலை 6:00 மணிக்கு கும்ப புறப்பாடு, மகா சம்ப்ரோக்ஷணம், 10:00 மணிக்கு கொடிமரம் மற்றும் துவார பாலர்கள் பிரதிஷ்டை நடைபெறும்.