மீனாட்சி சொக்கநாத சுவாமி கோயில் ஆனி விழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2014 02:07
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில், இந்து சமய அறநிலையத்துøக்கு சொந்தமான, மீனாட்சி சொக்கநாத சுவாமி கோயில்ஆனி விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயில் நிர்வாக அதிகாரி நாராயணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 13 நாட்கள் நடைபெறும் விழாவில் சொக்கநாதர், மீனாட்சி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். பத்தாம் நாள் திருக்கல்யாணம், 11 ம் நாள் திருத்தேர் வலம் நடைபெறுகிறது.