Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திரவுபதி அம்மன் கோவிலில் ... பழநி கோயில் நிரந்தர கட்டளைதாரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2014
03:07

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா மங்கள இசையுடன் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை, சுவாமி சன்னதி முன்பாக உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. நேற்று துவங்கி பத்து நாட்கள் விழா நடைபெறும் 3 ம் தேதி சுவாமி, அம்பாள் வெள்ளிச் சப்பரத்தில் உலா வருகின்றனர். எட்டாம் திருநாளில் நடராஜர், பச்சை சாத்தி எழுந்தருவார். அன்று மாலை தங்க சப்பரத்தில் சுவாமி கங்காளநாதர் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 10ம் தேதி நடக்கிறது. நெல்லையப்பர் கோயில் தேர் 450 டன் எடை கொண்டது. 35 அடி உயரமும், 28 அகலமும் கொண்ட இந்த தேர் தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேராகும். ஆனித் திருவிழாவை முன்னிட்டு சுவாமி நெல்லையப்பர் தேர், காந்திமதி அம்பாள் தேர், விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகிய தேர்களை சீரமைக்கும் பணிகள் நடந்துவருகிறது.ஆண்டுதோறும் ஆனித்திருவிழாவின் போதுதான் நெல்லையில் அரசு சார்பில் பொருட்காட்சியும், பாளையங்கோட்டையில் மாநில அளவிலான புத்தக கண்காட்சியும் நடப்பதால் நெல்லை விழா கோலம் பூண்டுள்ளது. 1505ம் ஆண்டில்தான் முதன் முறையாக நெல்லையப்பர் கோயிலில் தேரோட்டம் நடந்துள்ளது. இந்த ஆண்டு நடப்பது 509வது ஆண்டு தேரோட்டமாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar