நெல்லிக்குப்பம்: பில்லாலி திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலி திரவுபதி அம்மன் ÷ காவிலில் கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று, அர்ச்சுனன் திரவுபதி திருக்கல்யாணம் நடந்தது. நாளை (4ம் தேதி) மாலை தீ மிதி உற்சவம் நடக்கிறது.