வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று மாலை துவங்கியது. இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னரால் 600 ஆண்டுகளுக்கு முன் இக்கோயில் கட்டப்பட்டது. மூலவராக காசிவிஸ்வநாதரும், அதன் அருகே தனி சன்னதியில் விசாலாட்சி அம்மனும் எழுந்தருளியுள்ளர். யாகசாலை மண்டபத்தில் கும்பாபிஷேக பூர்வாங்க பூஜைகள், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து ஹோமங்களுடன் நேற்றுமாலை துவங்கியது. சிவாச்சார்யார்கள் மந்திரங்களுடன் தீபாராதனைகள் நடந்தது. இன்றும் நாளையும் நடைபெறும் யாகசாலை பூஜைகளை தொடர்ந்து நாளை மறுநாள் (ஜூலை 9 ல்) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டியினர் பக்தர்கள் செய்துள்ளனர்.