வக்ரகாளியம்மன் கோவிலில் இன்று பவுர்ணமி ஜோதி தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2014 02:07
திருக்கனுார்: திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில், பவுர்ணமி ஜோதி தரிசனம் இன்று நடக்கிறது. திருக்கனுார் அடுத்த தமிழகப்பகுதியான திருவக்கரையில் புகழ்வாய்ந்த சந்திர மவுலிஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள வக்ர காளியம்மனுக்கு மாதந்தோறும் பவுர்ணமி உற்சவம் நடந்து வருகிறது.இம்மாதத்திற்கான பவுர்ணமி உற்சவம் இன்று (11ம் தேதி) நடக்கிறது. இதனையொட்டி, காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம், மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, இரவு 12:00 மணிக்கு அம்மன் கோவில் கோபுரத்தில் ஜோதி தரிசனம் நடக்கிறது.