பதிவு செய்த நாள்
11
ஜூலை
2014
02:07
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா 9 ம்நாள் தேரோட்டம் நேற்று நடந்தது. 2ல் காப்புகட்டுதலுடன் பத்து நாள் விழா துவங்கியது. தினமும் கோயிலில் சிறப்பு பூஜை, இரவு பகல் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, எட்டாம் நாள் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று மாலை பிரியாவிடை சமேத சொக்கநாதர் பெரியதேரிலும், மீனாட்சி அம்மன் சிறியதேரிலும், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சப்பரத்திலும் தேரோடும் வீதியில் உலா நடந்தது.ஏராளமான பக்தர்கள் தேர்வடம் பிடித்தனர்.இரவு அரசுப்பணியாளர்கள் 50 வது ஆண்டுபொன்விழா கலை நிகழ்ச்சி நடந்தது.முன்னாள் ஊராட்சி தலைவர் சி.சத்தியமூர்த்தி, அம்பலகாரர் சி. விஸ்வநாதன்,கூட்டுறவு சங்க தலைவர் சொ.திருவாசகம், பொதுப்பணித்துறை மேலாளர் (ஓய்வு) சொ.சண்முகம், அ.தி.மு.க.,கிளை செயலாளர் செ.ரவிச்சந்திரன். சுப.மணிவண்ணன், குருக்கள் ஆர் குமார்.எஸ்.எஸ்.டைனமிக் பொன்பாஸ்கரன்,சுப்பையா இன்டஸ்ரீஸ் பெரி.சுப்பையா,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (ஓய்வு) சொக்கலிங்கம்,விவசாய நீர்பாசனத்துறை வட்டார தலைவர் பெரி.சதாசிவம்,ராம.ரவி டைலர் பங்கேற்றனர். முறையூர் கிராமத்தினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பாகனேரி: பாகனேரி புல்வநாயகியம்மன் கோயில் ஆனித்தேரோட்டம் நடைபெற்றது. கடந்த 2 தேதி காப்புக்கட்டுடன் தொடங்கி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் 8 ஆம் நாள் நிகழ்ச்சியாக வருடத்தில் ஒரு முறை மட்டும் உலா வரும் சாமுண்டீஸ்வரி ஊர்வலம் நடைபெற்றது.9ஆம் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை தேங்காய் போடுவது முடிந்ததும் பெரிய தேரில் புல்வநாயகியம்மனும், சிறிய தேரில் வினாயகரும் வீற்றிருக்க 5.55மணிக்கு தேரோட்டம் தொடங்கி நான்கு ரத வீதிகள் வழியாக6.45 க்கு தேர் நிலைக்கு வந்தது.