பதிவு செய்த நாள்
11
ஜூலை
2014
02:07
திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே பரியா மருதிப்பட்டி, சேவுகப்பெருமாள் கோயிலில்,ஆனி உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. ஜூலை 1ல் சுவாமி பரியாமருதிப்பட்டிக்கு புறப்பாடு நடந்தது. 2 ம் தேதியன்று காப்புக்கட்டி உற்சவம் துவங்கியது. ஜூலை 6ம் தேதியன்று திருக்கல்யாணமும், 6,7,8ம் திருநாள்களில், சுவாமி புறப்பாடும் நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி பூரண,புஷ்கலா தேவியருடன் தேரில் எழுந்தருளினர். மாலை 4.50 மணிக்கு, தேரோட்டம் வடம் பிடிக்க,தேர் வலம் வந்தது. நாளை வெள்ளி தட்டாரணம், நாளை மறுநாள், காப்புப் பிரித்தலும், சுவாமி நெற்குப்பை புறப்பாடும் நடைபெறும்.